அண்ணா சீரியல்
அண்ணன்-தங்கைகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் அண்ணா.
மிர்ச்சி செந்தில்-நித்யா ராம் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த தொடர் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.
துர்கா சரவணன் இயக்கத்தில் 400 எபிசோடுகளுக்கு மேல் தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது.
சில சமயங்களில் இந்த தொடரின் கதைக்களம் விறுவிறுப்பாக அமைய ஜீ தமிழ் டிஆர்பியில் டாப்பில் வந்துள்ளது.
பரபரப்பு தகவல்
ஏற்கெனவே தொடரில் இருந்து நிறைய நடிகர்கள் மாற்றம் நடந்துள்ள நிலையில் இப்போது ஒரு தகவல் வைரலாகிறது.
அதாவது அண்ணா தொடரில் நாயகன்-நாயகியாக நடித்துவரும் மிர்ச்சி செந்தில்-நித்யா ராம் இருவரும் தொடரில் இருந்து விலகிவிட்டதாக ஒரு பரபரப்பு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என சீரியல் தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது.