கார்த்திகை தீபம்
ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர்களில் ஒன்று தான் கார்த்திகை தீபம்.
செம்பருத்தி என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை வென்ற கார்த்திக இதில் நாயகனாக நடிக்க அர்த்திகா நாயகியாக நடித்து வருகிறார்.
கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த தொடரை சதாசிவம் முதலில் இயக்கி வந்தார்.
இப்போது கார்த்திக் என்பவர் இயக்கி வருகிறார்.
ஸ்பெஷல் வீடியோ
இந்த நிலையில் கார்த்திகை தீபம் சீரியல் குழுவினர் ஒரு ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதில் முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில் கார்த்திகை தீபம் தொடர் ஒளிபரப்பாக இருப்பதாக ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அதில் நாயகன் கார்த்திக் செம கெத்தான கெட்டப்பில் காணப்படுகிறார்.