பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிறைய தொடர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
அப்படி வேறு எந்த மொழி ரீமேக் தொடராக இல்லாமல் தமிழிலேயே உருவாக்கப்பட்டு மற்ற மொழிகளில் ரீமேக் ஆன தொடர் என்ற பெருமையை பெற்றது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் விதமாக அமைந்த இந்த தொடரின் முதல் சீசன் முடிவடைய இரண்டாவது சீசன் அப்பா-மகன்கள் கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
புதிய சீரியல்
இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மிகவும் ஹிட்டான கதாபாத்திரம் என்றால் அது முல்லை தான். சித்ரா நடித்துவர பின் காவ்யா நடிக்க கடைசியாக லாவண்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அந்த சீரியல் முடிந்ததும் பலரும் கிடைத்த தொடர்களில் நடித்துவர லாவண்யா எதிலும் கமிட்டாகவில்லை.
இந்த நிலையில் அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். இதைக்கேட்டதும் ரசிகர்கள் முழு நேரம் வரும் தொடர் சீக்கிரம் கமிட்டாகுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.