Wednesday, October 9, 2024
Homeசினிமாஜெயம் ரவிக்கு மனைவி ஆர்த்தி செய்த கொடுமைகள்.. ஆதாரத்தை வெளியிட போவதாக கூறிய பிரபலம்

ஜெயம் ரவிக்கு மனைவி ஆர்த்தி செய்த கொடுமைகள்.. ஆதாரத்தை வெளியிட போவதாக கூறிய பிரபலம்


நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தி ஆகியோர் இடையே இருக்கும் பிரச்சனை பெரிய அளவில் பரபரப்பாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட நிலையில் அதற்கு காரணம் அவர் கெனிஷா என்ற பாடகி உடன் நெருக்கமாக இருப்பது தான் என ஒரு கிசுகிசு பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என ஜெயம் ரவி விளக்கம் கொடுத்தார்.

மேலும் ஜெயம் ரவி தனக்கென தனி பேங்க் அக்கவுண்ட் இல்லை, செலவுக்கு பணம் எப்போதும் மனைவியிடம் தான் வாங்க வேண்டும். கார் உட்பட எல்லா சொத்தும் இருவரது பெயரில் தான் இருக்கிறது என ஜெயம் ரவி கூறியதாக தகவல் வெளியானது.

கெனிஷா

தன்னை பற்றி தவறாக பலரும் பேசுவதால் பாடகி கெனிஷா பேட்டி கொடுத்து விளக்கம் அளித்து இருந்தார்.


“என்னுடைய எல்லை என்ன என்பது எனக்கு தெரியும். எனக்கு பெற்றோர் இல்லை. ஆனால் ஒரு therapist ஆக ஒரு விஷயம் சொல்கிறேன்.. ஜெயம் ரவி அவரது குடும்பத்தால் சந்தித்த வலி பெற்றோர் இழந்த வலியை விட பெரியது.”

“ஆர்த்தி மற்றும் அவரது பெற்றோர் ஜெயம் ரவிக்கு செய்த கொடுமைகள் பற்றி கேட்கும்போது எனக்கு மிகப்பெரிய வலி ஏற்பட்டது. யாராக இருந்தாலும் இவ்வளவு மோசமாக நடத்த கூடாது.”

“ஜெயம் ரவி சந்தித்த வலிகள் பற்றி அவரது அனுமதியுடன்/அனுமதி இல்லாமலோ அதற்கான ஆதாரங்களை என்னுடைய therapy notesல் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க தயார்.”

“ஆர்த்தி தவறு செய்துவிட்டு தற்போது என்னை பலிஆடாக மாற்ற பார்கிறார்கள். இது தொடர்ந்தால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என கெனிஷா கூறி இருக்கிறார். 

ஜெயம் ரவிக்கு மனைவி ஆர்த்தி செய்த கொடுமைகள்.. ஆதாரத்தை வெளியிட போவதாக கூறிய பிரபலம் | Jayam Ravi Has So Much Pain Kenisha

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments