எம். ராஜேஷ் இயக்கத்தில் இதுவரை நகைச்சுவை கலந்த எமோஷனல் படங்கள் பல வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிரதர்
அந்த வரிசையில் தற்போது ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ள பிரதர் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த மக்காமிஷி பாடல் வேற லெவல் ஹிட்.
மேலும் இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ், பூமிகா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டீசர்
இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த பிரதர் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. கலகலப்பான பிரதர் படத்தின் டீசர் இதோ..