Tuesday, February 18, 2025
Homeசினிமாஜெயம் ரவி விவாகரத்து விஷயத்தில் திடீரென ஆர்த்தி சொன்ன விஷயம்... வழக்கில் அடுத்து என்ன?

ஜெயம் ரவி விவாகரத்து விஷயத்தில் திடீரென ஆர்த்தி சொன்ன விஷயம்… வழக்கில் அடுத்து என்ன?


ஜெயம் ரவி

ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றி நாயகனாக வலம் வருபவர் ஜெயம் ரவி.

ஜெயம் என்ற முதல் படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிகை கொடுக்க அடுத்தடுத்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, உனக்கும் எனக்கும், தாஸ், சந்தோஷ் சுப்பிரமணியம் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்தார்.

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் ராஜாவாக மக்கள் மனதில் இடம் பிடித்த ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக பிரதர் படம் வெளியாகி இருந்தது, நல்ல வரவேற்பும் பெற்றிருந்தது.


விவாகரத்து


வெற்றி நாயகனாக வலம்வரும் ஜெயம் ரவி வாழ்க்கையில் மனைவியுடன் சில பிரச்சனைகள் வர விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.

அதில் இருந்து நிறைய சர்ச்சை பேச்சுகள் எழுந்தன. விவாகரத்திற்கு ஜெயம் ரவி தொடர்ந்து வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்துள்ளது.

ஜெயம் ரவி விவாகரத்து விஷயத்தில் திடீரென ஆர்த்தி சொன்ன விஷயம்... வழக்கில் அடுத்து என்ன? | Jayam Ravi Aarti Divorce Case Details

ஜெயம் ரவி ஆஜரான நிலையில் ஆர்த்தி தனக்கு உடல்நிலை சரியில்லாததால் இன்றைய தினம் பேச்சு வார்த்தைக்கு வர முடியவில்லை என்றும் பேச்சு வார்த்தையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.



இதையடுத்து, ஜெயம் ரவியிடம் 10 நிமிடங்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்திய நீதிபதி, விசாரணையை நவம்பர் 27ம் தேதி மாலை நான்கு மணிக்கு தள்ளிவைத்தார்.  

ஜெயம் ரவி விவாகரத்து விஷயத்தில் திடீரென ஆர்த்தி சொன்ன விஷயம்... வழக்கில் அடுத்து என்ன? | Jayam Ravi Aarti Divorce Case Details

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments