பிரியங்கா கோத்தாரி
தமிழ் சினிமாவில் ஒரு சில படத்தில் நடித்து அதன்முலம் பிரபலமான நடிகைகள் மிகவும் குறைவு. அந்த வகையில் நடிகை பிரியங்கா கோத்தாரி அதிர்ஷ்டசாலி. இவர் சரண் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஜேஜே.
இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்திருப்பார். நூறு ரூபாய் நோட்டை தேடி மாதவன் அலைவது போன்ற காட்சிகள் அதற்கு ஏற்ப பின்னணியில் தேடி தேடி தீர்ப்போமா என்ற பாடல்கள் அன்று இருக்கும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று கொடுத்தது.
ஜேஜே திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த பிரியங்கா அடுத்தடுத்து தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்தார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு அந்த படங்கள் வரவேற்பு பெறவில்லை என்பதால் அவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
லேட்டஸ்ட் புகைப்படங்கள்
கடைசியாக அவர் தமிழில் கச்சேரி ஆரம்பம் படத்தில் வெளியான வாடா வாடா பையா பாடலுக்கு நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போதைய பிரியங்கா கோத்தாரி புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..