ஜே ஜே படம்
தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு நிறைய நாயகிகள் களமிறங்கினார்கள்.
ஒருசிலர் இப்போதும் நடிக்கிறார்கள், ஆனால் நிறைய நடிகைகள் இருக்கும் இடம் காணாமல் போய்விட்டனர்.
அந்த வகையில் 2003ம் ஆண்டு சரண் இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த படம் ஜே ஜே. மாதவனுக்கு ஜோடியாக தமிழ்பேசும் வங்க தேச பெண்ணாக நடித்திருப்பார்.
இந்த படம் வெளியான போது இவர் தேவயானி சாயலில் உள்ளார் என பலரும் விமர்சனம் செய்தனர். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களில் நடித்தாலும் பெரிதாக ரசிகர்களால் வரவேற்கப்படவில்லை.
லேட்டஸ்ட்
தமிழில் கடைசியாக ஜீவாவின் கட்சேரி ஆரம்பம் படத்தில் வாடா வாடா பையா என்ற பாடலில் மட்டும் நடனம் ஆடியிருந்தார்.
அதன்பிறகு காணாமல் போன பிரியங்காவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் ஜே ஜே பட நாயகியாக இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.