Thursday, March 27, 2025
Homeசினிமாஜோதிகா மும்பை சென்றதற்கான காரணம் இதுதான்.. வைரலாகும் சூர்யாவின் பேட்டி

ஜோதிகா மும்பை சென்றதற்கான காரணம் இதுதான்.. வைரலாகும் சூர்யாவின் பேட்டி


சூர்யா

கோலிவுட்டில் ரசிகர்கள் அதிகம் விரும்பக்கூடிய நட்சத்திர ஜோடிகளில் சூர்யா – ஜோதிகாவும் ஒருவர். சினிமாவில் வருவது போன்று நிஜத்திலும் காதல் என்றால் என்ன என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த ஜோடி வலம் வருவர்.

தற்போது சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வரும் நவம்பர் 14 – ம் தேதி வெளிவரும் படம் கங்குவா. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சூர்யா, அவரது மனைவி ஜோதிகா தற்போது மும்பையில் இருப்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

காரணம் இதுதான்

அதில், ” ஜோதிகா அவரது 18 வயதில் சென்னைக்கு வந்தார் திருமணத்திற்கு பின் 27 ஆண்டுகள் சென்னையில் என் குடும்பத்துடன் இருந்து விட்டார். இதனால் அவர் நண்பர்கள், தொழில் என அனைத்தையும் விட்டுவிட்டார்.

நான் அவரின் இந்த தியாகத்தை அங்கீகரிக்க நினைத்தேன். அவர் மும்பை செல்ல இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. கொரோனா தொற்றுநோய்க்குப் பின், அவர் ஒரே மாதிரியான படங்களில் நடிப்பது போன்று தோன்றியது.

ஜோதிகா மும்பை சென்றதற்கான காரணம் இதுதான்.. வைரலாகும் சூர்யாவின் பேட்டி | Suriya Talk About Jyothika Shifted To Mumbai

தற்போது, அவர் மும்பையில் பெற்றோருடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சி தான். ஒரு நடிகனாக சினிமாவில் அவரது வளர்ச்சியை கண்டு நான் பெருமை படுகிறேன்” என்று கூறியுள்ளார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments