நடிகர் பிரஷாந்த்
90ஸ் காலகட்டத்தில் டாப் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தவர் நடிகர் பிரஷாந்த். இவர் நடிப்பில் தற்போது அந்தகன் திரைப்படம் உருவாகி வெளிவரவுள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முதல் பாடலை தளபதி விஜய் வெளியிடவுள்ளனர். நடிகர் பிரஷாந்த் மற்றும் விஜய் இருவரும் இணைந்து முதல் முறையாக GOAT திரைப்படம் நடித்துள்ளனர்.
[UVTU9A ]
விசில் போடு பாடலுக்கு இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை ஏற்படுத்தியது.
இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகனான நடிகர் பிரஷாந்த் தனது இளம் வயதில் இருந்தே சினிமாவில் நடிக்க துவங்கினார். ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தையும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயது புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகர் பிரசாந்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..