கமல் ஹாசன் – தக் லைஃப்
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவர் நடிகர் கமல் ஹாசன். இவர் விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்த வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டானார்.
அதன்படி கடைசியாக அவரது நடிப்பில் இந்தியன் 2 படம் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸான அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை. அடுத்து இவர் மணிரத்னம் இயக்கிவரும் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இப்படத்தில் இவருடன் இணைந்து திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். அதை தொடர்ந்து, தற்போது இந்த படத்தில் சிம்பு இணைந்திருக்கிறார். இது தொடர்பான கேரக்டர் இண்ட்ரோ வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
கமல் போட்ட கண்டிஷன்
இந்நிலையில் தக் லைஃப் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த படத்தின் முதல் பாதியை கமல் பார்த்து விட்டதாகவும். கமலுக்கு இந்த படம் ரொம்பவே பிடித்துவிட்டதாகவும், மேலும் டிசம்பர் 20ஆம் தேதி இந்த படத்தை ரிலீஸ் செய்ய மணிரத்னத்திடம் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தாமதம் ஆனதால் அந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்தன. எனவே உடனடியாக தக் லைஃப்பை சென்சாருக்கு அனுப்புமாறு மணிரத்னத்துக்கு கமல் ஹாசன் அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.