தங்கலான்
இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தங்கலான். இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார்.
மேலும் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் ஜனவரி மாதம் வெளிவரவிருந்தது.
ஆனால், சில காரணங்களால் அதிலிருந்து தள்ளிப்போன நிலையில் இம்மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக ரசிகர்களிடையே வருத்தம் ஏற்பட்டது.
ரிலீஸ்
இந்த நிலையில், இறுதியாக தங்கலான் திரைப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.