தங்கலான்
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பலரும் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞானவேல் ராஜா விமர்சனம்
இந்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். படத்தை பார்த்தவுடன் உடனடியாக விக்ரம் அண்ணா மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித் இருவருக்கும் போன் கால் செய்து பேசினேன். படத்தின் முதல் பாதி பார்க்கும்போதே, எனக்கு ஆனந்த் கண்ணீர் வந்துவிட்டது. இந்த மாதிரி திரைப்படத்தை நான் தயாரித்து இருக்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது” என கூறியுள்ளார்.