தங்கலான்
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தினை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் வரும் ஆகஸ்ட் 15 ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தினை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் ஆகும்.
இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்ட படக்குழுவினர். முதலில் புரோமோசனுக்காக வெளி மாநிலங்களில் உள்ள மெட்ரோ நகரங்களுக்குச் சென்று அங்கு ரசிகர்களைச் சந்தித்து படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்தனர்.
விக்ரம் பேச்சு
இந்நிலையில், நேற்று அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி மதுரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற தனியார் கல்லூரிக்கு படக்குழுவினர் சென்றனர். அங்கு மாணவர்களைச் சந்தித்து அவர்களிடையே தங்கலான் படம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அப்போது, படத்தின் கதாநாயகன் விக்ரம் பேசினார், அவர் மாணவர் மத்தியில் பேசுகையில் தங்கலான் போன்ற ஒரு அருமையான படத்தினை எனக்கு கொடுத்த இயக்குநர் பா. ரஞ்சித்துக்கு மிகவும் நன்றி எனவும், படப்பிடிப்பு நாட்களில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உரையாடிக்கொண்டு இருப்போம் எனவும் ஆனால் தற்போது நாம் யாரைச் சந்திக்கப்போகின்றோம், என்ன மாதிரியான உடையை அணியலாம் என்பது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார்.
தங்கலான் போன்ற படத்தினை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு தில் இருக்கணும். அந்த தில் இருந்ததால் தான் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இந்த படத்தை தூளாக தயாரித்துள்ளார் எனவும் பேசினார்.