வினேஷ் போகத்
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இறுதி போட்டிக்கு சென்றுள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், உடல் எடை கூடியதால் விதிகளின் படி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவருக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வினேஷ் போகத் இந்திய மல்யுத்த சம்மௌனத்தின் தலைவராக இருந்த பாஜக பிரபலம் மீது பாலியல் குற்றசாட்டுகளை முன் வைத்தார்.
மேலும் தலைவர் பொறுப்பில் உள்ளவரை மாற்ற வேண்டும் என சக மல்யுத்த வீரர்களோடு சுமார் 40 நாட்களாக போராட்டமும் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் பிரதமர் மோடியையும் விமர்சித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதரவு
இந்நிலையில் பிரபல நடிகை சமந்தா, சில சமயங்களில் கடினமான தடைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கும். நீங்கள் தனியாக இல்லை அதை நினைவில் கொளுங்கள். பல சிரமங்களுக்கு இடையே நிலைத்து நிற்கும் உங்கள் அசாத்திய திறமை உண்மையில் போற்றத்தக்கது என்று தெரிவித்துள்ளார்..