Sunday, November 3, 2024
Homeசினிமாதந்தை சிவக்குமார் செயல்!! தலையில் கைவைத்து கொண்ட சூர்யா.. அப்படி என்ன ஆச்சு

தந்தை சிவக்குமார் செயல்!! தலையில் கைவைத்து கொண்ட சூர்யா.. அப்படி என்ன ஆச்சு


சூர்யா

முதல் முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் கங்குவா என்பதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அடுத்த மாதம் 14 – ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தற்போதே படக்குழு தொடங்கி இருக்கிறது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

பாலிவுட் நட்சத்திரங்களான பாபி தியோல், திஷா பாடானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் கங்குவா படத்தின் இசை வெளியிட்டு விழா மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இதில் படக்குழுவினர் மட்டுமின்றி நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி, தந்தை சிவக்குமார் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.

தந்தை சிவக்குமார் செயல்!! தலையில் கைவைத்து கொண்ட சூர்யா.. அப்படி என்ன ஆச்சு | Suriya Father Trolled Him In Stage

சிவகுமார் செயல்

அந்த நிகழ்ச்சியில் சூர்யா குறித்து சில சுவாரசியமான விஷயங்களை சிவக்குமார் பகிர்ந்துள்ளார். அதில், “சூர்யாவுக்கு லயோலா கல்லூரியில் பி.காம் படிக்க விண்ணப்பிக்க சென்றபோது இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள்.

அதன் பின், நான் சென்று என்ன பிரச்சனை என்று பிரின்சிபலை கேட்டேன் அப்போது சில பிரபலங்களின் மகன்கள் இங்கு படித்தார்கள் ஆனால் படிப்பை பாதியிலேயே விட்டு சென்றுவிட்டார்கள்.

தந்தை சிவக்குமார் செயல்!! தலையில் கைவைத்து கொண்ட சூர்யா.. அப்படி என்ன ஆச்சு | Suriya Father Trolled Him In Stage

அதேபோல் உங்க மகனும் செய்வார் என்றார். நான் கண்டிப்பாக என் பையன் அவ்வாறு செய்யமாட்டான் என்றேன் ஆனால் சூர்யா கடைசி ஆண்டில் நான்கு அரியர் வைத்திருந்தார்” என கூறும்போது சூர்யா அய்யோ என தலையில் கைவைத்துக் கொண்டார்.  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments