பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி தொடர் தமிழ் சின்னத்திரையில் ஒருகாலத்தில் டிஆர்பியில் டாப்பில் ஓடிய சீரியல்.
பாக்கியா என்ற பெண்ணை மையமாக வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடரில் இப்போது மிகவும் அழுகையாக எபிசோடு ஒளிபரப்பாகி வருகிறது.
ஈஸ்வரி கீழே தள்ளிவிட்டதால் தான் ராதிகாவின் கர்ப்பம் கலைந்தது என்ற பழியோடு அவர் பாக்கியா வீட்டிற்கு சென்றுவிட்டார். ராதிகாவும், அவரது அம்மாவும் இதையே வைத்து கோபியிடம் சண்டை போட்டு வருகிறார்.
இந்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை, புரொமோவும் வெளியாகவில்லை.
இன்றைய எபிசோட்
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் போதை தெளிந்து இருக்கும் கோபியிடம், ராதிகா எனது அம்மாவை பற்றி ஏன் தகறாக பேசினீர்கள் என சண்டை போடுகிறார். அவரது அம்மா ஈஸ்வரி ஒரு கொலைகாறி என கூற கோபப்பட்ட கோபி அவரை அடிக்க கை ஓங்குகிறார்.
இதனை பார்த்து ஷாக்கான ராதிகா தனது அம்மாவிடம் மன்னிப்பு கேட்க கூறுகிறார், ஆனால் கோபி முடியாது என செல்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.