மந்த்ரா
தமிழில் 1996ம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான பிரியம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மந்த்ரா.
அதன்பின் விஜய்யுடன் லவ் டுடே, அஜித்துடன் ரெட்டை வயசு, பெரிய இடத்து மாப்பிள்ளை, கங்கா கௌரி, தேடினேன் வந்தது, கொண்டாட்டம் போன்று வரிசையாக படங்களில் நடித்தார்.
கிளாமர் ரோல்களிலும் நடித்து வந்தவர் தெலுங்கில் நிறைய குடும்ப பாங்கான படங்கள் நடித்து வந்தார். பின் கடந்த 2005ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஸ்ரீமுனி என்பவரை திருமணம் செய்துகொண்டு திரையுலகை விட்டு விலகினார்.
இடையில் சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தவர் தெலுங்கு சீரியல்களில் நடித்து வருகிறார்.
வெயிட் லாஸ்
இப்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளவர் எப்படி தனது உடல் எடையை குறைத்தேன் என்பது பற்றி கூறியுள்ளார்.
அதில் அவர், உடல் எடை குறைவதற்காக ஒருவேளை சாப்பிடும் சாப்பாட்டை 6 வேளைக்கு பிரித்து சாப்பிடுவேன், நிறைய தண்ணீர் குடிப்பேன். வேகமாக வாக்கிங் போவேன், ஸ்விம்மிங்கில் ஏரோபிக்ஸ் செய்வேன்.
அதிகாலை 4.30 மணிக்கே நீச்சல் குளத்தில் ஏரோபிக்ஸ் செய்ய ஆரம்பித்துவிடுவேன். இப்படிதான் 95 கிலோவில் இருந்து 62 கிலோவாக என்னுடைய எடையை குறைத்தேன் என்று கூறியுள்ளார்.