பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவி குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
5 வருடங்களாக முதல் சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வர கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. முதல் சீசன் முடிந்த வேகத்திலேயே 2வது சீசன் தொடங்கியது. இதில் முதல் சீசனில் நடித்த சிலர் நடிக்கிறார்கள்.
புதியதாக இணைந்தவர்களும் நாம் பார்த்து பழகிய நடிகர்கள் தான். இந்த 2வது சீசன் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தும் வகையில் கதை செல்கிறது.
வாழ்த்து
இந்த தொடரில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கதாநாயகி என்ற ஷோ மூலம் பிரபலமான ஷாலினி, ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் இருந்தே இவரது கதாபாத்திரத்திற்கும், ஷாலினியின் நடிப்பிற்கும் ரசிகர்களிடம் பாராட்டு கிடைத்து வருகிறது.
நடனத்திலும் ஆர்வம் கொண்ட இவர் எப்போதும் தனது கணவருடன் நடனம் ஆடும் வீடியோ, சோலோ நடன வீடியோ என ஏதாவது பதிவிட்ட வண்ணம் இருப்பார்.
தற்போது நடிகை ஷாலினி தனது கணவரின் பிறந்தநாளுக்கு கியூட்டான புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார். அவர்களின் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிவதோடு பிறந்தநாள் வாழ்த்தும் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.