பாடகர் அறிவு
சுயாதீன பாடல்கள் மூலம் அறிமுகமாகி பல சினிமா திரைப்பட பாடல்களுக்கு வரிகள் எழுதி, பாடி பிரபலமானவர் அறிவு.
தற்போது, சென்னை தியாகராயர் நகரில் அமைந்துள்ள இசைஞானி இளையராஜா ஸ்டுடியோவில் இளையராஜா தலைமையில் தெருக்குரல் அறிவு அவரது காதலியான கல்பனாவை திருமணம் செய்து உள்ளார்.
அதன் பின், அம்பேத்கர் மணி மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
தற்போது, இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் என அனைவரும் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.