முத்தழகு
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களுக்கு இணையாக வெற்றிகரமாக தொடர்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட முத்தழகு தொடர் இன்னமும் மதிய வேளையில் ரசிகர்களின் பேராதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறது.
முத்தழகு என்ற ஏழை பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி தான் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஒருவரை அம்மா சொன்னதால் கல்யாணம், காதலித்து பிரிந்த ஒருவரை சூழ்நிலை காரணமாக செய்த திருமணம். இப்படி இரண்டு திருமணம் செய்து படாத பாடு பட்டுக்கொண்டு வருகிறார் பூமி.
ஆனால் இந்த கதையின் மீது பலருக்கு கடும் கோபம் உள்ளது என்று தான் கூற வேண்டும்.
நாயகன் காதலி
இந்த தொடரில் பூமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் ஆஷிஷ்.
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது தனது காதலியின் புகைப்படத்தை முதன்முறையாக ஷேர் செய்துள்ளார்.
தனது காதலியுடன் எடுத்த புகைப்படங்களை வீடியோவாக ஷோர் செய்து அழகான கேப்ஷன் செய்து பதிவு செய்துள்ளார். அதோடு அவரது தன்னுடைய வருங்கால மனைவி டாக்டர் காயத்ரி சிவா என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆஷிஷ் தனது காதலி யார் என்ற செய்தியை வெளியிட்டதும் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.