வனிதா விஜயகுமார்
பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். மின்னல் வந்து செல்வது போல் சினிமாவில் நுழைந்து பின் உடனே காணாமல் போனார்.
அதன்பின் திருமணம், குழந்தைகள் என ஆனவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மக்களின் கவனத்திற்கு வந்தார், அந்நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து ஆக்டீவாக சினிமாவில் பயணித்து வருகிறார்.
வெள்ளித்திரையோ, சின்னத்திரையோ வரும் வாய்ப்புகள் பிடித்திருந்தால் பயன்படுத்திக்கொள்கிறார். இதுதவிர சொந்தமாக நிறைய தொழில்களையும் தொடங்கி கவனித்து வருகிறார்.
மகள்கள் கேள்வி
ஆண்களும் ஆண்களும் திருமணம் செய்கிறார்கள், பெண்களும் பெண்களும் திருமணம் செய்கிறார்கள்.
இவர்களது திருமணம் சிறப்பாக அமைவதாக தன்னுடைய பெண்கள் சுட்டிக்காட்டி தன்னை திட்டுவதாகவும், தான் ஏன் ஒரு பெண்ணை காதலிக்க கூடாதா என்று கேள்வி எழுப்புவதாகவும் வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார்.