பாண்டியன் ஸ்டோர்ஸ்
கடந்த 2018ம் ஆண்டு சில புதுமுகங்கள், நிறைய நாம் பழக்கப்பட்ட நடிகர்கள் இடம்பெற விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
1600 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான இந்த தொடரை Venus Infotainment தான் தயாரித்திருந்தனர்.
முதல் சீசனிற்கு கிடைத்த வெற்றி முதல் பாகம் முடிவடைய கடந்த 2023ம் ஆண்டு 2வது சீசன் தொடங்கப்பட்டது.
அப்பா-மகன்கள் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடர் நாளுக்கு நாள் மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.
நடிகை ஹேமா
முதல் சீசனில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்ற நடிகை ஹேமா தற்போது 2வது சீசனிலும் அதே பெயரில் நடித்து வருகிறார்.
அவரது கதாபாத்திரத்திற்கு ஹேட்டர்ஸ் என யாருமே இல்லை என்று கூட கூறலாம்.
தற்போது மீனா கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற ஹேமா அண்மையில் தனது மகனின் 4வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்களை பதிவிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.