இலியானா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த போது கேடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இலியானா.
பின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார்.
தெலுங்கு மற்றும் தமிழில் கலக்கி வந்தவர் ஹிந்தியில் பர்ஃபி, ஹேப்பி என்டிங், ருஷ்டம், ரை போன்ற படங்களிலும் நடித்து கலக்கியுள்ளார்.
கடைசியாக தெலுங்கில் அமர் அக்பர் அந்தோனி படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மகன் போட்டோ
படங்களில் பிஸியாக நடித்துவந்த இலியானா திடீரென கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
காதலனை முதலில் அறிமுகம் செய்யாத இலியானா பின் மைக்கேல் டாலன் என்பவருடன் திருமணம் நடந்ததை அறிவித்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் மகனின் முதல் நாளில் கியூட்டான புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார் இலியானா.