நாக சைத்தன்யா
நடிகை சமந்தாவின் காதலர் என்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் நாக சைத்தன்யா.
பிரபல தெலுங்கு சினிமா நடிகர் நாகர்ஜுனாவின் மகனான இவர் அந்த மொழிகளில் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். தமிழில் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாரான கஸ்டடி படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை.
நாக சைத்தன்யா படத்தை தாண்டி இப்போது அவரது திருமண விஷயங்கள் தான் சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது.
திருமண பரிசு
நாக சைத்தன்யாவிற்கு சோபிதாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடக்க டிசம்பர் 4ம் தேதி இவர்களின் திருமணம் படு பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது. திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் எல்லாம் கோலாகலமாக நடந்து வருகிறது.
தனது மகன் நான சைத்தன்யாவின் திருமண பரிசாக நாகர்ஜுனா லெக்சாஸ் எல்.எம்.எம்பி வி ரக காரை வாங்கியுள்ளார்.
இந்தக் காரின் உற்பத்தி விலை ரூ. 2 கோடியே 15 லட்சமாம், பதிவு வரிகள் அனைத்தும் சேர்த்து காரின் மொத்த விலை ரூ. 2 கோடி 50 லட்சம் என கூறப்படுகிறது.