இந்திரஜா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கார்த்தி, சூர்யா, தனுஷ் என பல நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடத்திலும், காமெடி வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர்.
இவரது வீட்டில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு விசேஷம் நடந்தது, அதாவது அவரது மகள் இந்திரஜாவின் திருமணம் தான். இந்திரஜாவிற்கு அவரது மாமா முறை கொண்ட கார்த்திக் என்பவருடன் தான் திருமணம் நடந்தது.
தனது மகளின் திருமணத்தை படு பிரம்மாண்டமாக சென்னையில் நடத்தி இருந்தார். தனது மகளுக்கு சுமார் 100 சவரன் நகை போட்டதாகவும், மருமகனுக்கு சொகுசு கார் ஒன்றையும் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
சந்தோஷ செய்தி
தற்போது இந்திரஜா மற்றும் அவரது கணவர் கார்த்திக் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்குபெற்று வருகின்றனர்.
அந்த நிகழ்ச்சியில் கார்த்திக் தனது மனைவிக்காக செய்த விஷயத்தை கூற அனைவருமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
தன் மனைவி தன்னைவிட குண்டாக இருக்கிறார் என யாரும் நினைத்து விடக்கூடாது என்பதற்காக 60 கிலோவில் இருந்து 120 கிலோவாக தன்னுடைய உடல் எடையை கூட்டியுள்ளாராம்.
தனது மனைவிக்காக கார்த்திக் உடல் எடையை ஏற்றியுள்ள விஷயம் கேள்விப்பட்டு அனைவருமே ஆச்சரியப்பட்டுள்ளனர்.