Friday, December 27, 2024
Homeசினிமாதனது முன்னாள் மனைவிக்காக நடிகர் தனுஷ் செய்த லேட்டஸ்ட் விஷயம்... வைரலாகும் போட்டோ

தனது முன்னாள் மனைவிக்காக நடிகர் தனுஷ் செய்த லேட்டஸ்ட் விஷயம்… வைரலாகும் போட்டோ


நடிகர் தனுஷ்

பிரபலத்தின் வாரிசு என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் நிறைய கஷ்டப்பட்டு தான் பலரும் முன்னேறுகிறார்கள்.

அந்த வரிசையில் மக்களால் முதலில் அடையாளப்படுத்தப்பட்டவர் தனுஷ், ஆரம்பத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா என்ற விமர்சனம் செய்யப்பட இப்போது சிறந்த நடிகர் தனுஷ் தான் என்ற அளவிற்கு கடின உழைப்பு போட்டு உயர்ந்திருக்கிறார்.

நடிகர் என்பதை தாண்டி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமையை காட்டி வருகிறார்.

சமீபத்தில் தனுஷின் 50வது படமான ராயன் படம் வெளியானது, அவரே இயக்கி, நடித்தும் இருந்தார்.


முன்னாள் மனைவி

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவை 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஆனால் இருவரும் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்து அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஓணம் ஸ்பெஷலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அழகான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாவில் பதிவிட அதற்கு நடிகர் தனுஷ் லைக்ஸ் போட்டுள்ளார்.

அதனை கண்ட ரசிகர்கள் தனுஷ் லைக்ஸ் போட்டுள்ளார் என புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments