Tuesday, February 18, 2025
Homeசினிமாதனிப்பட்ட வாழ்க்கையில் மன அழுத்தம்.. முதன் முறையாக மனம் திறந்த ஜிவி பிரகாஷ்

தனிப்பட்ட வாழ்க்கையில் மன அழுத்தம்.. முதன் முறையாக மனம் திறந்த ஜிவி பிரகாஷ்


ஜிவி பிரகாஷ்

குழந்தை பாடகராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், இசையமைப்பாளராக வெயில் படத்தின் மூலம் அறிமுகமானார். அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த இவர், பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

இசையமைப்பது, நடிப்பது என பிஸியாக வலம் வரும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் மலேசியாவில் நடந்த இசை கச்சேரியில் தனது முன்னாள் மனைவியும், பாடகியுமான சைந்தவியுடன் கலந்துகொண்டு பாடினார்.

ஜிவி பிரகாஷ் பேட்டி 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் தன் தனிப்பட்ட வாழக்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ” தனிப்பட்ட வாழக்கையும் நாம் செய்யும் வேலையும் வேறு வேறு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்போது தான் நமது பணியை சிறப்பாக செய்து முடிக்க இயலும்,  அப்படி நான் இருந்ததால்தான் என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடிகிறது.

தனிப்பட்ட வாழ்க்கையில் மன அழுத்தம்.. முதன் முறையாக மனம் திறந்த ஜிவி பிரகாஷ் | Gv Prakash About His Private Life

நாம் செய்யும் தொழில் 100 % சதவீத உழைப்பை கொடுக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அந்த வேலைக்கு நாம் தகுதி இல்லாதவர்களாக ஆகிவிடுகிறோம். எனக்கும் தனிப்பட்ட ரீதியில் மன அழுத்தம் இருக்கிறதுதான் ஆனால் அது வேறு இது வேறு” என்று கூறியுள்ளார்.        

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments