தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் தனுஷ்.
நடிப்பு மட்டுமில்லாமல் படங்கள் இயக்குவதிலும் சிறந்து விளங்கும் இவர் பா. பாண்டி, ராயன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இதை தொடர்ந்து, அடுத்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தில், தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்கவுள்ளார்.
அதை தொடர்ந்து,மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், வெங்கடேஷ் மேனன், ரபியா காத்தூன் மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் நடிக்கின்றனர்.
வைரல் வீடியோ
தற்போது, இந்த படத்தின் முதல் பாடலான கோல்டன் ஸ்பேரோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அதற்கு முக்கிய காரணம் இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் ஸ்பெஷல் அப்பியரன்ஸில் வந்து ஆடியுள்ளார்.
மேலும், இந்த பாடலை நடிகர் தனுஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷ் என பலர் இணைந்து பாடியுள்ளனர்.
அந்த வகையில், கோல்டன் ஸ்பேரோ பாடல் இதுவரை 5.6 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டாகி வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.