Friday, December 6, 2024
Homeசினிமாதனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு


தனுஷ்- ஐஸ்வர்யா

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த 2004 – ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த கொண்டிருந்த இந்த ஜோடி திடீரென கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை சமூக வலைத்தளங்களின் மூலம் அறிவித்தனர்.

இவர்களுடைய பிரிவு செய்தி ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இவர்களுடைய பிரிவிற்கு என்ன காரணம் என இருவரும் கூறவில்லை.

வழக்கு ஒத்திவைப்பு

அதை தொடர்ந்து, இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பரஸ்பரம் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு | Dhanush Aishwarya Case Date Changed

இந்நிலையில், இந்த வழக்கில் தனுஷ்- ஐஸ்வர்யா இருவரும் ஆஜராகாத காரணத்தினால் தற்போது இந்த வழக்கு அக்டோபர் 19 ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments