Wednesday, October 9, 2024
Homeசினிமாதனுஷ், நயன்தாரா, சிம்பு எல்லாம் இப்படித்தான்.. ஓபனாக கூறிய நடிகை விந்தியா

தனுஷ், நயன்தாரா, சிம்பு எல்லாம் இப்படித்தான்.. ஓபனாக கூறிய நடிகை விந்தியா


நடிகை விந்தியா

தமிழில் ‘சங்கமம்’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இளம் வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை விந்தியா.

இந்த படத்தை இப்போது இருக்கும் 90 – ஸ் கிட்ஸ் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதை தொடர்ந்து, பல வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருக்கும்போது சினிமாவை விட்டு திடீரென விலகினார் விந்தியா.

முன்னணி நட்சத்திரங்கள் குறித்து விந்தியா 

இந்நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு முன்னணி நட்சத்திரங்கள் குறித்து பேசியுள்ளார்.

அந்த பேட்டியில், “நடிகர் தனுஷ் சினிமாவில் நுழைந்த போது அவரை பலர் கேலி கிண்டல் செய்தனர்.

ஆனால், தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி அதில் கொடிக்கட்டி பறக்கிறார். அந்த அளவிற்கு ஒரு திறமையான நடிகர்.

அவரை தொடர்ந்து, என் தம்பி சிம்பு “சகலகலா வல்லவனின் மகன்” ஆனால் அவரை சுற்றி எப்போதும் ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்கும் அதை எதிர்த்து ஜெயிக்கும் ஒரு தைரியம் சிம்புவிடம் உள்ளது.



இப்போது இருக்கும் சினிமா துறையில் நடனம் என்று சொன்னால் முதலில் நியாபகம் வருவது நடிகர் விஜய் தான். அவரை போல் நடனமாடும் ஒரு சிறந்த நடிகரை எங்கையும் காண முடியாது.

அதுபோல தல அஜித் பற்றி செல்ல வேண்டும் என்றால் மிகவும் இயல்பான குணம் கொண்ட ஒரு சிறந்த மனிதர்.


அதை தொடர்ந்து, நடிகை நயன்தாரா என்று சொன்னால் பல வலிகளை தாண்டி தனக்கென ஒரு இடத்தை இன்று சினிமாவில் பிடித்து நடிகர்களுக்கு சமமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுபோன்று தான் திரிஷாவும் 20 வருடங்களாக இளமையாக நடமாடும் ஒரு சிறந்த நடிகை” என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

தனுஷ், நயன்தாரா, சிம்பு எல்லாம் இப்படித்தான்.. ஓபனாக கூறிய நடிகை விந்தியா | Actress Vindhya Talk About Cinema Celebrities

      

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments