நடிகை அனிகா
தமிழில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா. இப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து மிருதன், நானும் ரவுடி தான் ஆகிய படங்களில் நடித்து வந்த அனிகா மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை அனிகா, மலையாளத்தில் வெளிவந்த Oh My Darling படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் தற்போது தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழும் என்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்தின் கோல்டன் ஸ்ப்ரோ பாடல் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அனிகா, தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.
சேலையில் ஆளே மாறிப்போன நடிகை
அந்த வகையில் சேலையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் நீங்களே பாருங்க..