Monday, March 17, 2025
Homeசினிமாதனுஷ் பிரச்சனை ஓயும் முன் நயன்தாராவுக்கு அடுத்த சிக்கல்! 5 கோடி கேட்கும் நபர்

தனுஷ் பிரச்சனை ஓயும் முன் நயன்தாராவுக்கு அடுத்த சிக்கல்! 5 கோடி கேட்கும் நபர்


நடிகை நயன்தாரா அவரது திருமண வீடியோவை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்து இருந்தார். Nayanthara: Beyond the Fairy Tale என்ற பெயரில் அது ஆவணப்படமாக ரிலீஸ் ஆனது.

இரண்டு வருடம் தாமதமாக அது ரிலீஸ் ஆன நிலையில், நடிகர் தனுஷ் நானும் ரௌடி தான் பட காட்சிகளை பயன்படுத்த அனுமதி அளிக்காதது தான் தாமதம் ஏற்பட காரணம் என கூறி ஒரு குற்றச்சாட்டை வைத்தார் நயன்தாரா.

அனுமதி இல்லாமல் நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தை பயன்படுத்தியதாக 10 கோடி நஷ்டஈடு கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

5 கோடி 

இந்நிலையில் அதே ஆவணப்படத்தில் சந்திரமுகி படத்தை பயன்படுத்தியதற்காக அனுமதி பெறவில்லை என சொல்லி தற்போது 5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.

தனுஷ் – நயன்தாரா மோதல் பிரச்சனை ஓயும் முன்பு தற்போது இப்படி ஒரு சிக்கல் வந்திருக்கிறது. 

தனுஷ் பிரச்சனை ஓயும் முன் நயன்தாராவுக்கு அடுத்த சிக்கல்! 5 கோடி கேட்கும் நபர் | Nayanthara Trouble Chandramukhi In Marriage Video

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments