துஷாரா விஜயன்
தமிழ் சினிமாவில் தற்போது வளந்து வரும் நடிகைகளில் ஒருவர் துஷாரா விஜயன். இவர் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் கதாநாயகியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த படத்தை தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்தார். இந்த படத்தில் ஆக்சன் காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்த துஷாராவுக்கு, ரஜினியின் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதை சரியாக பயன்படுத்தி கொண்டு அவரது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் குறித்து சில விஷயங்களை துஷாரா பகிர்ந்துள்ளார்.
பேட்டி
அதில், “தனுஷ் குறித்து சமூக வலைதளத்திலும், சினிமா வட்டாரத்திலும் பேசப்படும் கிசுகிசுக்கள் அனைத்தும் பொய்யானது. அவர் மிகவும் டிசிப்ளினான நடிகர் அவர் நடிப்பின் மீது அளவில்லா பாசம் வைத்துள்ளார்” என்று தனுஷ் குறித்து பாசிட்டிவாக பேசியுள்ளார்.
தற்போது, இந்த கருத்துக்கு ரசிகர்கள் தங்கச்சி என்றால் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்று பாராட்டி கமெண்ட் செய்து
வருகின்றனர்.