நடிகர் அஜித்தின் 32 ஆண்டுகள்
அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் ஆவார். பல கோடி ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்படும் ஹீரோவான அஜித் சினிமாவிற்கு வந்து 32 ஆண்டுகள் ஆகியுள்ளது.
இதனை ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், தற்போது அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெறித்தனமான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
32 ஆண்டுகளை கடந்த அஜித் அவர் கடந்த வந்த பாதையை குறிப்பிட்டு விடாமுயற்சி படத்திலிருந்து இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதுவரை வெளிவந்த விடாமுயற்சி படங்களின் போஸ்டரை விட, இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இதோ அந்த போஸ்டர் :
மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன், குட் பேட் அக்லி படப்பிடிப்பில் அஜித் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Celebrating 32 years of Ajith Kumar! 🎉 A journey forged through trials, tribulations, and triumphs. 💪 His perseverance is the ultimate symbol of enduring success! 🔥#VidaaMuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/Hj7j8sUcuV
— Suresh Chandra (@SureshChandraa) August 3, 2024