Friday, December 6, 2024
Homeசினிமாதன் காதல் பற்றி போட்டுடைத்த நடிகை சுனைனா

தன் காதல் பற்றி போட்டுடைத்த நடிகை சுனைனா


நடிகை சுனைனா

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை சுனைனா. இவர் கடந்த 2008 -ம் ஆண்டு நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன் லத்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.


சமீபத்தில் இவர் லாக் என்று குறிப்பிட்டு ஒரு நபரின் கையை பிடித்தபடி புகைப்படம் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது, அது பிரபல யூடியூபர் காலித் அல் அமேரி என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

தன் காதல் பற்றி போட்டுடைத்த நடிகை சுனைனா.. வெளியான ரகசியம் என்ன தெரியுமா | Sunaina Talk About Her Love

சுனைனா நடித்த ராக்கெட் டிரைவர் படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகா உள்ள நிலையில், அந்த படம் குறித்து பேட்டிகளில் பேசி வருகிறார்.

காதல் பற்றி சுனைனா

இந்நிலையில், பேட்டி ஒன்றில் லிவிங் டுகெதர் வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,அதற்கு what என்று கோவத்துடன் சுனைனா கேட்க அதனை மாற்றி தொகுப்பாளினி உங்கள் காதலர் மற்றும் காதல் வாழ்க்கை குறித்து கூறுமாறு கேட்டார்.

அதற்கு உஷாராக ” நான் சினிமாவை மட்டும் தான் காதலிக்கிறேன் என் தனிப்பட்ட நேரத்தில் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். அதை என் பொழுதுப்போக்காக பார்க்காமல் படங்கள் மூலம் பலவற்றை கற்று கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments