சாய் பல்லவி
மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்து தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் சாய் பல்லவி. ‘பிரேமம்’ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தன் மூலம் திரையுலகில் பிரபலமான இவர் ‘தியா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பிறகு, ‘மாரி 2’, ‘என்.ஜி.கே’ போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து பல ரசிகர்களை சம்பாதித்தார்.
சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணனுக்கு சமீபத்தில் படுகர் என்ற பாரம்பரிய முறைப்படி திருமணம் நடந்த நிலையில், சாய் பல்லவி திருமணம் குறித்து முன்பு ஒரு பேட்டியில் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.
திருமணம் குறித்து சாய் பல்லவி
அந்த பேட்டியில், “நான் வயது வந்தவுடன், நான் ஒரு படுகாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது.
என் கிராமத்தில் படுகா அல்லாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவர்களை எந்த நிகழ்ச்சிகளுக்கும், இறுதிச் சடங்குகளுக்கும் அழைப்பதில்லை,வேறு விதமாகப் பார்ப்பார்கள்.
நான் சினிமாவிற்கு வந்த பிறகு, என் அப்பா என்னிடம் வந்து படுகர் சமூகத்தில் இருப்பவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும், இது கலாச்சாரத்தைப் பற்றியது என்று கூறினார்.
அவர் மிகவும் அப்பாவியாக இருந்தார். ஆனால், நான் அவரிடம் கலாச்சாரத்திற்காக என்னால் நீங்கள் விரும்புவதை செய்ய முடியாது. அது மிகவும் தவறு என்று கூறினேன்” என அந்த பேட்டியில் சாய் பல்லவி கூறியுள்ளார்.