சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் டிவியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் ஒரு தொடர்.
ரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் இந்த தொடருக்கு சமீபத்தில் நடந்த விஜய் விருதில் கூட சிறந்த தொடருக்கான விருது கிடைத்தது.
இப்போது கதையில் தன்னை மிரட்டிவருபவனிடம் இருந்து ரோஹினி எப்படி தப்பிக்க போகிறார் என்பது தான் விறுவிறுப்பாக செல்கிறது.
இன்றைய எபிசோட்
இன்றைய எபிசோடில் தன் மீது பழி போட்டவர் யார் என்பதை முத்து கண்டுபிடிக்கிறார், இதனால் ரோஹினி பதறுகிறார்.
பின் முத்துவிடம் இருக்கும் வீடியோவை எடுக்க தனது தோழி வித்யாவை வைத்து ரோஹினி பிளான் போடுகிறார்.
ஆனால் கடைசியில் அவர் பிளான் சொதப்பி விடுகிறது, பின் ரோஹினி, முத்துவிடம் இருந்து வீடியோ எடுப்பது மட்டுமே வழி என யோசிக்கிறார்.