தமன்னா
நடிகை தமன்னா, தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2ல் நடித்த போது பாலிவுட் நடிகர் விஜய்வர்மா உடன் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பின்னர் இருவரும் தங்களின் காதலை உறுதிப்படுத்தினார்கள்.
பேட்டி
சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட விஜய் வர்மா, தனது திருமண திட்டங்களை பற்றிக் கூறியுள்ளார். அவர், “என்னுடைய திரைப்படங்கள் வெளியாகுவதைக் குறைவாகவும் எங்களுடைய டேட்டிங் விஷயத்தை அதிகமாகவோ மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதை முதலில் தெரிந்துகொண்ட போது அதிர்ச்சி அடைந்தேன், ஆனால் இப்போது பழகிவிட்டது. எனக்கும் தமன்னாவுக்கும் இடையே ஆழமான மற்றும் அன்பான உறவு உள்ளது,” என்றார்.
“உங்களுக்கு எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்று உணருகிறீர்களோ அப்போது திருமணம் செய்யுங்கள். திருமணம் என்பது ஒரு பார்ட்டி அல்ல; அது மிகப்பெரிய பொறுப்பு. மற்றவர்கள் திருமணம் செய்கிறார்கள் என்பதாலோ, சமூகம் அழுத்தம் கொடுப்பதால் அல்ல, உங்கள் மனசாட்சியின் அடிப்படையில் மட்டும் திருமணம் செய்ய வேண்டும்,” என்று விஜய் வர்மா கூறினார்.