தமன்னா
தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர் தமன்னா.
இவர் இந்தி நடிகரான விஜய் வர்மாவை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் ஒன்றாக விருது மற்றும் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை நம்மால் காணமுடிகிறது.
தமன்னாவை பற்றி பேசிய விஜய்
இந்த நிலையில், தற்போது பேட்டி ஒன்றில் விஜய் நடிகை தமன்னாவை பற்றி பேசியுள்ளார், அதில் நானும் தமன்னாவும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் பல என்னிடம் உள்ளது. அவை மொத்தமாக 5000 புகைப்படங்கள் இருக்கும், ஆனால் இவை அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை நாங்கள் விரும்பவில்லை.
அதற்கு முக்கிய காரணம், நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் மதிக்கிறோம், அதனால் இவை அனைத்தையும் எங்கள் இதயத்தில் நாங்கள் அன்பாக வைத்திருக்க வேண்டும் என விரும்புவதாக கூறினார்.