விடாமுயற்சி
துணிவு படத்தின் ரிலீஸிற்கு பிறகு அஜித், மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்தார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜானில் நடைபெற்றது, அங்கு படப்பிடிப்பில் அஜித்திற்கு விபத்து எல்லாம் ஏற்பட்டது. அந்த வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆனார்கள், இவ்வளவு கடுமையாக காட்சிகள் நடித்தாரா என கஷ்டப்பட்டார்கள்.
ஒருவழியாக படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியாகி இருந்தது, கலவையான விமர்சனங்கள் வந்தாலும் அஜித்தின் முயற்சிக்காகவே படத்தை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
பாக்ஸ் ஆபிஸ்
ரஜினி, விஜய்க்கு பிறகு பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருக்கும் அஜித்தின் விடாமுயற்சி நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
13 நாள் முடிவில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 9 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.