வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரும் படங்கள் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் வேட்டையாடும்.
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த வேட்டையன் உலகளவில் ரூ. 239 கோடியை கடந்துள்ளது. TJ ஞானவேல் இயக்கத்தில் உருவான இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், வேட்டையன் படம் லைகாவிற்கு லாபம் கொடுத்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
தமிழக வசூல் விவரம்
இந்த நிலையில், உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வரும் வேட்டையன், 11 நாட்களில் தமிழ் நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வேட்டையன் படம் 11 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ. 99 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் என்னென்ன சாதனைகளை படைக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.