Monday, December 9, 2024
Homeசினிமாதமிழச்சி என்பதால் ஹிந்தி பிக்பாஸில் ஸ்ருதிகாவுக்கு ஏற்படும் கொடுமைகள்.. முதுகுக்கு பின்னால் பேசும் போட்டியாளர்கள்

தமிழச்சி என்பதால் ஹிந்தி பிக்பாஸில் ஸ்ருதிகாவுக்கு ஏற்படும் கொடுமைகள்.. முதுகுக்கு பின்னால் பேசும் போட்டியாளர்கள்


பிக் பாஸ்

பிக் பாஸ் 8 கடந்த வாரம் தமிழில் பிரமாண்டமான முறையில் துவங்கியது. கமல் ஹாசன் கடந்த 7 சீசன்களாக தொகுத்து வந்த நிலையில், தற்போது 8வது சீசனை தொகுத்து வழங்குவதற்காக விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார்.

ஹிந்தி பிக் பாஸ்

தமிழில் எப்படி கடந்த வாரம் பிக் பாஸ் 8 துவங்கியதோ, அதே போல் ஹிந்தியிலும் கடந்த வாரம் பிக் பாஸ் சீசன் 18 துவங்கப்பட்டது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர். அதில் ஒருவர் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன்.

தமிழில் பிரபலமான ஒருவராக இருக்கும் இவர் தற்போது ஹிந்தி பிக் பாஸில் என்ன செய்கிறார் என முதலில் பலருக்கும் கேள்வி எழுந்தது. ஆனால், பிக் பாஸ் சீசன் 18 மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். இவர் மூலம் அதிக கன்டென்ட் கிடைத்து வருகிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

தமிழச்சி என்பதால் ஹிந்தி பிக்பாஸில் ஸ்ருதிகாவுக்கு ஏற்படும் கொடுமைகள்.. முதுகுக்கு பின்னால் பேசும் போட்டியாளர்கள் | Shruthika Gets Bullied In Hindi Bigg Boss

ஸ்ருதிகாவுக்கு ஏற்படும் கொடுமைகள்

ஹிந்தி பிக் பாஸில் இருந்தாலும் அவ்வப்போது தன்னை மீறி தமிழில் பேசி விடுகிறார் ஸ்ருதிகா. அதற்கும் மன்னிப்பும் கேட்டார். அதே போல் அங்குள்ள போட்டியாளர்களுக்கு சிலருக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார்.

தமிழச்சி என்பதால் ஹிந்தி பிக்பாஸில் ஸ்ருதிகாவுக்கு ஏற்படும் கொடுமைகள்.. முதுகுக்கு பின்னால் பேசும் போட்டியாளர்கள் | Shruthika Gets Bullied In Hindi Bigg Boss

இந்த நிலையில் ஸ்ருதிகா தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் அங்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சிலர் அவரை பற்றி தவறாக முதுகுக்கு பின்னால் பேசுகிறார்களாம். ஸ்ருதிகா ஹிந்தியில் தொடர்ந்து பேசினாலும், அவர் பேசும் விதத்தில் தமிழ் ஸ்லாங் வந்துவிடுகிறது. இதனால் அங்குள்ள சிலர் அதை வைத்து ஸ்ருதிகாவை கிண்டல் செய்கிறார்களாம், ஒரு மாதிரி பார்க்கும்போது அது ஸ்ருதிகாவிற்கு வருத்தமாக இருக்கிறது என அவரே கூறியுள்ளார். 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments