Monday, April 21, 2025
Homeஇலங்கைதமிழரசுக் கட்சிக்கு ஒரு சட்டம் ஏனைய கட்சிக்கு வேறு சட்டம் : மணிவண்ணன் குற்றச்சாட்டு –...

தமிழரசுக் கட்சிக்கு ஒரு சட்டம் ஏனைய கட்சிக்கு வேறு சட்டம் : மணிவண்ணன் குற்றச்சாட்டு – Oruvan.com


இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேச சபைக்கான வேட்பு மனுவில் ஒரு வேட்பாளர் நிராகரிக்கப்பட்ட போதும், தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேச சபைக்கான வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயர் சட்டத்தரணி மணிவண்ணன்குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ் மாநகர சபைக்கான தமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேசசபைக்கான வேட்பு மனுவில் ஒரு வேட்பாளர் நிராகரிக்கப்பட்ட போதும், தமிழரசுக் கட்சிக்கான நல்லூர் பிரதேசசபைக்கான வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் கவலைக்குரிய விடயம், 2023 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் திருத்தச்சட்டத்தில் 31 உப பிரிவு 03 சொல்கிறது “ஒருவர் கையொப்பமிடவில்லையெனில் நிராகரிக்கப்பட முடியாது” என சொல்கிறது.

நிராகரிக்கப்பட முடியாது என சொல்லப்பட்ட சட்டத்தை வைத்து எனது வேட்புமனுவை நிராகரித்துள்ளார்கள். குறித்த சட்டத்தில் 31 உப பிரிவு 01 எப்பொழுது வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என சொல்கிறது.

அதன்படி குறித்த சட்டப்பகுதியின் பி பிரிவில் ‘“மொத்த எண்ணிக்கையை கொண்ட வேட்பாளர்கள் வழங்கப்படாதவிடத்து குறித்த வேட்புமனு நிராகரிக்கப்படலாம்” குறித்த சட்டப்பகுதியின் எப் பிரிவில் “சட்டத்தாலே தேவைப்படுத்தப்பட்ட பெண்களையோ இளைஞர்களையோ / யுவதிகளையோ உள்ளடக்காது விட்டால் வேட்புமனு நிராகரிக்கப்படலாம்” என சொல்லப்பட்டிருக்கிறது.

வேட்புமனுப் பத்திரத்தின்படி எமது சமர்ப்பிப்பு சரியாக உள்ளது” என அவர் கடுமையாக சாடியுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments