Tuesday, February 18, 2025
Homeசினிமாதமிழில் மட்டும் தான் பேசுவேன்.. அதிரடியாக கூறிய தெலுங்கு பட ஸ்டார் அல்லு அர்ஜுன்

தமிழில் மட்டும் தான் பேசுவேன்.. அதிரடியாக கூறிய தெலுங்கு பட ஸ்டார் அல்லு அர்ஜுன்


அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுனின் திரை வாழ்க்கையில் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று புஷ்பா. கடந்த 2021ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் முதல் பாகம், மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அனுஷ்யா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.



மேலும் நடிகை சமந்தா ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை சமந்தாவிற்கு பெற்று கொடுத்தது.

புஷ்பா 1 தி ரைஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா தி ரூல் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வரும் டிசம்பர் 5 – ம் தேதி வெளிவர உள்ளது.

இதன் காரணமாக, தற்போது படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நேற்று சென்னை தாம்பரத்தில் புஷ்பா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

 உணர்ச்சிபூர்வ விஷயங்கள்

இதில், அல்லு அர்ஜுன் சில உணர்ச்சிபூர்வ விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், “நான் பிறந்த இந்த மண்ணுக்கு என் அன்பான வணக்கங்கள். தமிழ் மக்களே.. இந்த நாளை என் வாழக்கையில் என்றும் மறக்கமாட்டேன்.

இந்த ஒரு நாள் எப்போது வரும் என்று பல வருடங்களாக காத்து கொண்டிருந்தேன். நான் என் முதல் 20 வருட வாழக்கையை சென்னையில் தான் வாழ்ந்தேன் இங்கு இருந்து தான் என் தொழிலை ஆரம்பித்தேன்.

தமிழில் மட்டும் தான் பேசுவேன்.. அதிரடியாக கூறிய தெலுங்கு பட ஸ்டார் அல்லு அர்ஜுன் | Allu Arjun Spoke Only In Tamil

அதனால் நான் என்ன சாதித்தாலும் அதை தமிழ் மண்ணுக்கு தான் சமர்ப்பிப்பேன்” என்று கூறியுள்ளார். மேலும், அங்கு உள்ள சிலர் அவரை தெலுங்குவில் பேசுமாறு கேட்டு கொண்டனர். அதற்கு என் தமிழ் மண்ணில் தமிழில் மட்டும் தான் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார். 

    



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments