சங்கீதா
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சங்கீதா. இவர் பின்னணி பாடகர் க்ரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை சங்கீதா தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழை விட தெலுங்கு தான் பிடிக்கும்
“நான் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்திருக்கிறேன். ஆனால், எனக்கு தமிழை விட தெலுங்கில் நடிப்பதுதான் பிடிக்கும்” என சங்கீதா கூறியுள்ளார்.
இதற்கு காரணமாக அவர் கூறியது “எனக்கு தமிழை விட தெலுங்கில் நல்ல மரியாதை கிடைக்கிறது. நான் தமிழை பிடிக்காத என பேசுவதை கேட்டு தமிழ் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டாலும் எனக்கு பரவாயில்லை. ஆனால், உண்மையை நாம் கூறி தான் ஆகவேண்டும். தமிழில் நடிக்கும்போது சரியான மரியாதை கிடையாது.
மரியாதை இல்லை
உண்மையை சொல்லவேண்டும் என்றால் நான் தமிழில் யாரிடமும் வாய்ப்பு கேட்பது கூட கிடையாது. ஏனென்றால் எனக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நல்ல சம்பளம் மற்றும் நிறைய வாய்ப்புகளும் கிடைக்கிறது. ஆனால், தமிழில் இருந்து சிலர் எனக்கு வாய்ப்பு கேட்டு போன் செய்கிறாரகள் என வைத்துக்கொள்வோம். அவர்கள் ஒரு மரியாதையே இல்லாமல் பேசுகிறார்கள்.
மேலும் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றால், எதோ அவர்களே எனக்கு வாழ்க்கை தருவது போல் பேசுகிறார்கள். நான் என்னமோ கஷ்டப்பட்டு கரண்ட் பில் கூட கட்டமுடியாமல் இருக்கிறேன் என்பது போல் பேசுகிறார்கள். உங்களுக்கு இவ்வளவு தான் சம்பளம் என அவர்களே என்னுடைய சம்பளத்தை நிர்ணயம் செய்கிறார்கள். நீங்க வந்து நடித்து கொடுத்துவிட்டு போன என்றும் சொல்கிறார்கள்.
நான் அவர்களுக்கு போன் செய்து வாய்ப்பு கேட்க வில்லையே, அவர்கள் தானே எனக்கு போன் செய்து நடிக்க கேட்கிறார்கள், அப்போது நான் தானே என்னுடைய ஒர்த் என்னவென்று சொல்லவேண்டும் என்று அவர்களிடம் சொன்னால், அதெல்லாம் சரியா இருக்கும் என்று கூறுவார்கள். எனக்கு இந்த மாதிரி பேசினால் பிடிக்காத.
எனக்கு அவங்க மரியாதையை கொடுக்கணும். ஆனால் அவர்கள் அதை கொடுப்பது இல்லை. அதனால்தான் நான் தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கிறது இல்லை” என கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது.