கோட் படம்
தமிழகத்தில் இருக்கும் டாப் நடிகர்கள் யார் யார் என்ற லிஸ்ட் எடுத்தால் டாப்பில் இருப்பவர் நடிகர் விஜய். இவரது படங்களின் பாக்ஸ் ஆபிஸ், சம்பளம், ரசிகர்களின் கூட்டம், படத்தின் வியாபாரம் என எல்லா விதத்திலும் டாப்பில் இருப்பவர்.
பிரபலத்தின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் படிப்படியாக பல மோசமான விமர்சனங்களை எல்லாம் எதிர்க்கொண்டு இப்போது உச்சத்தில் இருக்கும் இவர் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியது தான் அனைவருக்குமே அதிர்ச்சியாக உள்ளது
ஆனால் சினிமாவை தாண்டி இன்னொரு நல்ல விஷயத்தை செய்ய அவர் இந்த முடிவு எடுத்ததால் ரசிகர்களும் ஆறுதல் அடைந்துள்ளனர்.
தமிழக வசூல்
தமிழகத்திவ் வசூல் ராசாவாக கொண்டாடப்படும் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் வெளியாகி இருந்தது. படம் வெளியான முதல் நாளே ரூ. 126 கோடி வசூலித்து இருந்தது.
தற்போது இந்த படம் தமிழகத்தில் மட்டுமே 7 நாள் முடிவில் ரூ. 134 கோடி வரை வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, சென்னையில் இதுவரை ரூ. 11 கோடி வரை வசூலித்துள்ளதாம்.