ராயன்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ராயன். இப்படம் வெளிவந்து 8 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இப்படத்திற்கு சிலர் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வந்தாலும், பெரும்பான்மையான மக்கள் படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.
உலகளவில் 7 நாட்களில் ரூ. 100 கோடியை ராயன் கடந்த நிலையில், தமிழ்நாட்டில் ரூ. 50 கோடி பாக்ஸ் ஆபிஸிலும் இணைந்து வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
தமிழக வசூல்
இந்த நிலையில் 8 நாட்களில் ராயன் படம் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம்.
இந்த நிலையில், 8 நாட்களில் தமிழ் நாட்டில் ரூ. 56 கோடிக்கும் மேல் இதுவரை ராயன் படம் வசூல் செய்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.
இது தனுஷின் 50 படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் ராயன் படம் எந்த அளவிற்கு வசூல் வேட்டை நடத்தப்போகிறது என்று.