GOAT
பெரிதும் எதிர்பார்ப்புடன் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் GOAT. வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படம் முதல் நாள் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. என்னதான் கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது GOAT.
வசூல்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இரண்டு நாட்களில் GOAT திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து பார்க்கலாம். அதன்படி, GOAT திரைப்படம் இரண்டு நாட்களில் ரூ. 50 கோடி வரை தமிழ்நாட்டில் வசூல் செய்துள்ளது.
முதல் நாள் ரூ. 30 கோடி வரை வசூல் செய்திருந்த நிலையில், இரண்டவது நாளில் ரூ. 20 கோடி வரை வசூல் செய்துள்ளது. மொத்தமாக இரண்டு நாட்கள் முடிவில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.