தங்கலான்
ஸ்டுடியா க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில், இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி நேற்று வெளிவந்த திரைப்படம் தங்கலான்.
[K8EB0K ]
இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் ஜி.வி. பிரகாஷின் இசை இப்படத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு சென்றுள்ளது.
மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இப்படம் உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாளே உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள வசூல் நிலையில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வசூல்
அதன்படி, தமிழ்நாட்டில் முதல் நாள் மட்டுமே ரூ. 17 கோடி வரை தங்கலான் திரைப்படம் வசூல் செய்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் முதல் நாளே அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் தங்கலானும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.